ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் விமான விபத்தில் உயிரிழந்தத 6 அமெரிக்கர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்ட ஆறு பணியாளர்களின் பெயர்களையும் அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது.

The Formula
மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது பிராந்திய போர் ஆபத்துகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

சவூதி வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆளில்லா விமானம் ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை இலக்கு வைக்க முயன்றுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 53 ஆளில்லா விமானங்கள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூகோள அரசியலின் ஆழமான உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல், சர்வதேச அளவில் ஏற்படும் நெருக்கடிகள் இலங்கை போன்ற நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியாது. தற்காலத்தில் சர்வதேச அரசியல் போக்குகளை மிக எளிமையான அல்லது மேலோட்டமான கண்ணோட்டங்களில் அணுகி, பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தைத் தூண்டும் ஒரு அரசியல் கலாசாரம் உருவாகி வருவதைக் காணமுடிகிறது.