முச்சக்கரவண்டிச் சேவைக்கு 40 வயது வரம்பு

நாட்டின் தொழிற்கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ள கருத்து தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

’எல் நினோ’ தாக்கத்தால் மின்வெட்டு அபாயம்

‘எல் நினோ’ (El Niño) நிலைமையின் தாக்கத்தினால் எதிர்காலத்தில் நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் அபாயத்திற்குப் புத்தாக்க மின் உற்பத்தி மூலங்கள் ஊடாகத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால்  தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி அகழ்வுக்கு 5 கோடியே 79 இலட்சம் செலவு

செம்மணி மனிதப் புதைக்குழியில் மூன்று கட்டங்களாக இதுவரை சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதற்காக 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.

ஹிஜாப் இஸ்லாத்திற்கு அவசியமானது அல்ல: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரிய பதினொன்றாம் வகுப்பு மாணவியின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை அல்ல என்றும், பாடசாலை சீருடைமைக் கொள்கையே மேலானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காசால் விபட்டங்கள் பறக்கவிடும் விவகாரம்: ஐ.நா. கண்டனம்

காசாவிலிருந்து பட்டங்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் பலூன்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவது தொடர்ந்தால் காசாவில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தது.

சிறுமி வன்புணர்வு, முக்கிய ஆதாரம் கிடைத்தது

பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில், சாட்சியாகப் சமர்ப்பிக்கப்பட்ட மிதியடியில்  சந்தேகநபரின் விந்து காணப்பட்டதாக அரசு பகுப்பாய்வாளர் அனுராதூர நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

இந்தியாவில் தலித் அரசியல்

Vimalaadhithan Mani

இந்தியாவில் தலித் அரசியல் ஏன் உருப்படாமல் போனது என்றால், தலித்துக்களுக்கு நானே மீட்பர் என கிளம்பும் யாரும் அரசியல் பரிசுத்தர்கள் இல்லை என்பதுதான்.பல உதாரணங்கள் உண்டெனினும் பெரும் உதாரணம் கொலையான ஆர்ம்ஸ்ட்ராங் கட்சியான பகுஜன் சமாஜ் பார்ட்டி தலைவர் மாயாவதி.

“திருமணப்பதிவு எனும் காலனித்துவ நடைமுறை”.…………………

(Siva Malathy)

கிராமப்புறங்களில் இப்போதுகூட பதிவுத் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் இருக்கின்றனர். அதுபோல, ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்யாமல் பாரம்பரிய முறைகளின்படி சடங்குத் திருமணம் செய்து சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததென்றே கூறமுடியும்.

18.08.2026 செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து + 0.64 என்ற அளவில் இருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு(Indian Ocean Dipole – IOD) இவ்வாரம் மிகச் சடுதியாக +0.18 என்ற அளவில் குறைவடைந்துள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் மூன்றாவது முறையாக நடைபெற்ற விசாரணைகள் முடிவுற்றதாக தகவல்…

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 16,966 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.