24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனம்

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப். 23 இல் சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறும்; மே 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது

உர விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக QR குறியீடு (QR Code) நடைமுறையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார்.

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்.

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை உயர்த்​தி​யுள்​ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.

புதுக்குடியிருப்பில் சர்வதேச மகளிர் தினம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், புதன்கிழமை (11) அன்றுபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

’ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் Work from Home?

தற்போதைய நெருக்கடியான காலக்கட்டத்திற்கு மத்தியில், இலங்கையில் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work from Home) நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.