2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஞாயிற்றுக்கிழமை (27) அன்று வழங்கி வைத்தார்.
Month: July 2025
21/4 தாக்குதல்: மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு
உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமையை இழந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு திங்கட்கிழமை (28) உத்தரவிட்டது. இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தாய்லாந்து – கம்போடியா நள்ளிரவு முதல் போர் நிறுத்தம்
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த கைது
நாளை முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்
நாளை (29) நள்ளிரவு முதல் நாடு தழுவிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர ஓட்டுநர் சங்கம் தெரிவித்துள்ளது. தவறான சமிக்ஞை அமைப்புகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்த அடையாள வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கத் தலைவர் கே.ஏ.யு. கொண்டசிங்க தெரிவித்தார். இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
தோழர் சுமித் சக்கரவர்த்தி
தோழர் சுமித்
குற்றச்சாட்டுகளை மறுத்தது இலங்கை பொலிஸ்
10,000 பொலிஸ் அதிகாரிகளை இணைக்கத் திட்டம்
ரயில்களை தடுத்த மரம்: வெட்டிய பின்இலகுவாக பயணிக்கும் ரயில்
இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததில் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. பாதை விழுந்த மரம்வெட்டி அகற்றப்பட்டதன் பின்னர், பதுளை-கொழும்பு கோட்டைக்கு இடையில் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


