எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது

செப்டம்பர் 12ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கப்படவுள்ள எமது பிரச்சார இயக்கத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

ஞானசாரருக்கு வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) தீர்ப்பளித்துள்ளது.

சுற்றுச்சூழலைப் பேணுவதற்கு மக்கள் இயக்கம் அவசியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்ப்பாதுகாப்பு ஆய்வு முயற்சியான ‘வஸ்பார்’ செயற்திட்டத்தின் நல்லூர் 2026 கண்காட்சியின் நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை (05.09.2026), “கோவில், குளம், காடு, கமம்” என்ற தலைப்பின் கீழ் மூன்று கட்டடக்கலைத் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட உரையாடல் வட்டம் இடம்பெற்றது.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வந்தடைந்தார்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிப்பதுடன், கொழும்பிலுள்ள இந்திய வம்சாவழியினரையும் சந்தித்து உரையாடுவார். அவர் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை வழிநடத்துவார்.

நோர்வூட் அஸ்வெசும மோசடி: ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் உடனடி அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

ஜேர்மனி மாநிலத் தேர்தல்: AfD வெற்றி

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனியில் முதல்முறையாக அதி வலதுசாரி மாநில அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாசாக்கற்ற, தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கட்சியான ‘மாற்றுக்கான ஜெர்மனி’ (Alternative für Deutschland – AfD) கட்சி, முக்கியமான மாநிலத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனினும், அக்கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது.

ரயிலுடன் மோதிய பேருந்து

இலங்கையின் ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்து சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

டிஜிட்டல் யுகத்தில் வாசிப்புப் பண்பாட்டைப் பாதுகாப்பது அவசியம்

மாறிவரும் நவீன வாழ்க்கை முறையும், டிஜிட்டல் ஊடகங்களின் அதிகரித்த ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆழமான வாசிப்புப் பண்பாட்டை மீளக் கட்டியெழுப்புவது காலத்தின் அவசியமாகும் எனத் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் பெருமளவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்

முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு இந்நாட்களில் பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.

6 ஆலயங்களில் ஒரே இரவில் தொடர் திருட்டு

கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.